திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த மண்டக்கொளத்தூர் கிராமத்தில் உள்ள விவசாயக் கிணற்றில் உயிரிழந்த நிலையில் பெண் உடல் மிதப்பதை அப்பகுதி மக்கள் நேற்று காலை பார்த் துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் போளூர் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று பெண்ணின் உடலை மீட்டனர். அப்போது, கிணற்றில் அருகே இருந்த துண்டுச் சீட்டு, காலணிகள் மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றை காவல் துறையினர் கைப்பற்றினர்.
பின்னர் அந்த துண்டுச் சீட்டை படித்தபோது அதில், ‘‘திருவண்ணா மலை அடுத்த நல்லவன்பாளை யத்தைச் சேர்ந்தவர்கள். கடன் தொல்லையால் தற்கொலை செய்து கொள்கிறோம். எங்களது உடல்களை ஊருக்கு அனுப்ப வேண்டாம்” என உருக்கமாக எழுதப்பட்டிருந்தது. மேலும், திருவண்ணாமலை அடுத்த நல்லவன்பாளையம், சமுத்திரம், மேட்டுத் தெருவில் வசிக்கும் சாந்திராஜ்(51)என்பவரது ஆதார் அட்டை என்பதும் தெரியவந்தது. கடன் தொல்லையால் ஒரே குடும் பத்தைச் சேர்ந்தவர்கள், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண் டிருக்கலாம் என்ற சந்தேகம் காவல் துறையினருக்கு எழுந்தது.
இதையடுத்து, கிணற்றில் குதித்து தீயணைப்பு துறையினர் தேடியபோது, இளைஞரின் உடல் மீட்கப்பட்டது. பின்னர், காவல் துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்டது சாந்திராஜின் மனைவி மீரா(40) மற்றும் மகன் தேவக்குமார்(23) என்பது தெரிய வந்தது. இதற்கிடையில், சாந்திராஜ் மகள் அனிதா வரவழைக்கப்பட்டு, அவர்களது விவரங்கள் உறுதி செய்யப்பட்டன. அதேநேரத்தில் சாந்திராஜ் நிலை தெரியவில்லை. அவரும் கிணற்றில் குதித்திருக்கலாம் என்ற சந்தேகத்தில், கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்ற முடிவு செய்யப்பட்டது. சுமார் 50 அடி ஆழம் உள்ள கிணற்றில், தண்ணீர் நிரம்பி இருந்ததால், மோட்டார்கள் மூலமாக தண்ணீர் வெளியேற்றும் பணி நடைபெற்றது. 7 மணி நேரம் தண்ணீர் வெளியேற்றப்பட்டும் சாந்திராஜ் நிலை குறித்து மாலை 6 மணி வரை தெரியவில்லை. அவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, “மண்டகொளத்தூர் கிராமத்தில் உள்ள அம்மன் கோயிலில் நடைபெற்ற ஆடி முதல் வெள்ளி சிறப்பு பூஜைக்கு குடும் பத்துடன் சாந்திராஜ் வந்துள்ளார். அந்த கோயில், அவர்களது குல தெய்வக் கோயில் என கூறப் படுகிறது. வெள்ளிக்கிழமை இரவு அங்கேயே தங்கியுள்ளனர். மறுநாள் (நேற்று முன்தினம்) காலையில், அவர்கள் 3 பேரையும் பார்த்ததாக ஒரு சிலர் கூறுகின்றனர். அதன்பிறகு அவர்கள் கிணற்றில் குதித்திருக்கலாம். தாய் மற்றும் மகன் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. சாந்திராஜ் நிலை குறித்து தெரிய வில்லை. அவரை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சாந்திராஜிக்கு கடன் கொடுத் தவர்களின் நெருக்கடியால், தற்கொலை முடிவுக்கு வந்திருக்க லாம். எதையும் தற்போது உறுதியாக சொல்ல முடியாது. கடன் தொகை எவ்வளவு என, அவர்களது வீட்டை சோதனையிட்ட பிறகு தெரியவரும். அவர்கள் பயன்படுத்திய கைப்பேசி எண் மூலமாக விசாரணை நடத்தப் படும். அதன்பிறகு முழு விவரம் தெரியவரும்” என்றனர்.
இந்நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன்குமார் சம்பவ இடத்துக்கு சென்று விசா ரணை நடத்தினார். மேலும் அவர், சாந்திராஜியின் மகள் அனிதாவிடம், தந்தையின் கடன் குறித்து விவரத்தை கேட்டறிந்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago