கடலூர் நகராட்சி பகுதியில் - ரூ.42 கோடியில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி : மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கடலூர் தாழங்குடா பகுதியில் கடல் அரிப்பை தடுக்க மேற்கல் சுவர்அமைக்கவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கடலூர் நகராட்சி பகுதியில் ரூ.42 கோடி மதிப்பீட்டில் மழை நீர் நகர் பகுதியில் தேங்காத வண்ணம் மழைநீர் வடிகால்கள் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் ஓயாசியஸ் சாலையில் ஆர்பி.நகர் பகுதியில் உள்ள கெடிலம் ஆற்றில் மழைநீர் சேருமிடம் புதுப்பிக்கப்பட்டு கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதைமாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். தேவனாம்பட்டினம் உப்பனாறு பகுதியில் மழைநீர் தேங்காத வண்ணம் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வுமேற்கொண்டார். நகராட்சி அலுவ லர்களிடம் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் அனைத்தும் விரைந்து முடிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.

தொடர்ந்து தாழங்குடா பகுதி யில் கடல் அரிப்பை தடுக்க 7 பகுதிகளில் மேற்கல் தடுப்பு சுவர் அமைத்து சுமார் 800 மீட்டர் நீளம் கடற்கரையை பாதுகாக்கவும், கூடுதலாக மீன் விற்பனைக்கூடம், மீன் உலர்தளம், சாலைவசதிகள் அமைக்கும் பணிக்காக ரூ 13.06கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது. இப்பணியை மீன்வளத்துறை மூலம் நபார்டு திட்டத்தின் கீழ் செயல்படுத்துவது குறித்து அப்பகுதிகளை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு செய் தார். நகராட்சி ஆணையர் புண்ணிய மூர்த்தி, துணை இயக்குநர் (மீன் வளத்துறை) காத்தவராயன், உதவி செயற்பொறியாளர் திருவருள், வட் டாட்சியர் பலராமன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்