மரக்காணம் அருகே குரும்பரம் பகுதியில் 750 ஏக்கர் பரப்பளவில் மூலிகை காடு உள்ளது. இந்தக் காட்டில் மான்கள், மயில்கள், முள்ளம் பன்றிகள், காட்டு பன்றிகள் வாழ்ந்து வருகின்றன. இந்த விலங்குகளுக்கு காட்டுப் பகுதியில் தேவையான குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் குடிநீர் தேடி அருகில் இருக்கும் கிராமங்களுக்கு வருகின்றன. இப்படி வரும் போது, எதிர்பாராத விதமாக வாகனங்களில் அடிபடுதல், சமூக விரோதிகளால் வேட்டையாடுதல் போன்ற சம்பவங்கள் நடைபெறுகின்றன.
இந்நிலையில் நேற்று காலை குரும்பரம் மூலிகை காட்டில் இருந்து ஒரு புள்ளிமான் அருகில் இருந்த கிராமப் பகுதிக்கு வந்துள்ளது. அப்போது தெரு நாய்கள் புள்ளி மானை துரத்தி கடித்துள்ளன. இதைக் கண்ட அப்பகுதி இளைஞர்கள், தெரு நாய்களை துரத்தி விட்டு படுகாயம் அடைந்த புள்ளிமானை மீட்டனர். வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் வந்து சிகிச்சையளிக்க கால்நடை மருத்துவரிடம் எடுத்துச் சென்றனர். செல்லும் வழியிலேயே அந்த மான் உயிரிழந்தது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago