விழுப்புரம் மாவட்டத்தில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் - கிராமங்களில் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு : ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் ஆய்வு

By செய்திப்பிரிவு

விழுப்புரத்தில் ஊரக வளர்ச்சி, ஊராட்சி திட்டப் பணிகள் குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது.

விழுப்புரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அமைச்சர்கள் பொன்முடி, மஸ்தான் ஆகியோர் முன்னிலையில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் நேற்று ஆய்வு மேற்கொண் டார். அப்போது, ஜல் ஜீவன்மிஷன் திட்டத்தின்கீழ் அனைத்துகிராமங்களிலும் வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு முறையாக வழங் கப்பட்டுள்ளதா, நிலுவையிலுள்ள குடிநீர் இணைப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அவாஸ் யோஜனா திட்டத்தின்கீழ் கட்டி முடிக்கப்பட்ட வீடுகளின் எண்ணிக்கை, நிலுவையில் உள்ள குடியிருப்பு கட்டுமானப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் அனைத்து கிராமங்களிலும் கசிவு நீர் குட்டை, சமுதாய உறுஞ்சு குழி, மீன் வளர்ப்பு குட்டை, நாற்றங்கால் பண்ணை, கால்நடை தீவனம் வளர்த்தல், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மண்புழு உரம் தயாரிக்கும் பணி, மரக்கன்றுகள் நடும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் கோபால், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் மேலாண்மை இயக்குநர் பல்தேவ், ஊரக வளர்ச்சித்துறை இயக்குநர் பிரவின்.பி.நாயர், மாவட்ட ஆட்சி யர் மோகன், எஸ்பி நாதா, திட்ட இயக்குநர் காஞ்சனா, மாவட்ட மகளிர் திட்ட அலுவலர் லலிதா, விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் சட்டமன்ற உறுப்பினர்கள் லட்சுமணன், புகழேந்தி மணிக்கண்ணன், சிவக் குமார், ஊரகவளர்ச்சித்துறை செயற்பொறியாளர் ராஜா உள் ளிட்டோர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்