பசுமை திட்டத்தின் கீழ் செடிகளுக்கு மானியம் வழங்க வலியுறுத்தல் :

By செய்திப்பிரிவு

பசுமை திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும் செடிகளுக்கு வளர்ப்பு மானியம் வழங்க வேண்டும் என தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் ராமகவுண்டர், தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

சமூக காடுகள் வளர்ப்பு துறையின் கீழ், தமிழ்நாடு உயர் பண்ணை பாதுகாப்பு பசுமை திட்டத்தின் கீழ் கடந்த 2011 முதல் 2018 வரை கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு 30 லட்சத்து 13 ஆயிரத்து 300 செடிகள் வளர்க்கப்பட்டு விவசாயிகளுக்கு செடி ஒன்றுக்கு ரூ.6.50 முதல் ரூ.7 வரை மானியம் வழங்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 2019 முதல் 2020 வரை 7 லட்சம் செடிகள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு நல்ல நிலையில் வளர்த்து வருகின்றனர்.

ஆனால் இதுவரை இந்த செடிகளுக்கு தமிழக அரசு வளர்ப்பு மானியம் வழங்கவில்லை. ஆகவே மழையில்லாத நேரத்திலும் தண்ணீரை டிராக்டர் மூலம் விலை கொடுத்து வாங்கி தரிசு நிலங்களை எழில் கொண்டதாக மாற்றிய விவசாயிகள் தற்போது கடனில் உள்ளனர். எனவே அரசு இவர்களுக்கு வழங்க வேண்டிய மானியத்தை உடனே வழங்கி காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்