நீலகிரி மாவட்டத்தின் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நோக்கில், 3 ஆண்டுகளுக்கு முன் இயற்கை விவசாய மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. விவசாயிகளும் அதற்கான நடைமுறைகளை கடைபிடித்து, இயற்கை விவசாயம் மேற்கொள்வதையும், மாவட்டம் முழுவதும் 50 சதவீதம் விவசாயிகள் இயற்கைவிவசாயத்துக்கு மாறி வருவதையும் தோட்டக்கலைத் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
விவசாயிகளின் நலன் கருதி, மத்திய, மாநில அரசுகள் 50 முதல் 100 சதவீதம் வரை, வேளாண்மை திட்டத்தில் மானியம் அளித்து வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தின் இயற்கைவிவசாயத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், நடப்பு ஆண்டில் தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டம், ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்கம் மூலமாக உருளைக்கிழங்கு, கேரட் மற்றும் உயர் ரக காய்கறி என இயற்கை சாகுபடிக்கு திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன. முதற்கட்டமாக 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தோட்டக்கலைத் துறை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் கூறும்போது, "நீலகிரியை இயற்கை வேளாண் மாவட்டமாக மாற்ற, அரசு திட்டம் வகுத்துள்ளது. அதற்கான பணிகள் வேகம் பிடித்துள்ளது. முதற்கட்டமாக, உதகை, முத்தோரை, பாலாடா உட்பட சில பகுதிகளில் 3,500 ஏக்கருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago