விழுப்புரத்தில் மாற்றுத்திறனாளிகள் முற்றுகை போராட்டம் :

By செய்திப்பிரிவு

விழுப்புரம் ஆட்சியர் வளா கத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைக்கான நல சங்கத்தினர் சுமார் 300-க்கும் மேற்பட்டோர் முற்றுகையிட்டு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டசெயலாளர் ஏ.கிருஷ்ண மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர் முருகன், மாநில குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.

இதில், ஆட்சியர், கோட்டாட்சியர் ஆகியோர் தலைமையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனா ளிகள் குறை தீர்க்கும் கூட்டத்தை நடத்த வேண்டும்.மாவட்ட மாற்றுத்திறனா ளிகள் ஒருங்கிணைப்பு குழுஉருவாக்க வேண்டும். மாற் றுத்திறனாளிகள் அளிக்கும் கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புதல் ரசீது முறையாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

இதையடுத்து ஆட்சியர் மோகன் சங்க நிர்வாகிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்,

அதில் மாற்றுத் திறனாளிகள் குறை தீர்ப்பு கூட்டத்தை கரோனா தொற்று முடிந்த பின்பு நடத்துவதாகவும், மற்ற கோரிக்கைகளை 10 நாட்க ளுக்குள் நிறைவேற்றி தரு வதாக உறுதி அளித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு மாற்றுத் திறனாளிகள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்