பெரம்பலூர் மாவட்டத்தில் அஞ்சலக ஆயுள் காப்பீடு, கிராமிய அஞ்சலக ஆயுள் காப்பீடு முகவர் நியமனத்துக்கான நேர்காணல் ரங்கத்திலுள்ள கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 30-ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெறுகிறது. விண்ணப்பதாரர் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, வயது 18 முதல் 50-க்குள் இருக்க வேண்டும். மற்ற ஆயுள் காப்பீட்டு நிறுவனங்களின் முகவர்களாக இருக்கக் கூடாது.
தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கல்வித் தகுதி, இருப்பிடச் சான்று, ஆதார் கார்டு, பான்கார்டு ஆகியவற்றின் அசல் மற்றும் நகல், 4 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்களுடன் நேர்காணலில் கலந்துகொள்ளலாம். தேர்வு செய்யப்பட்டவர்கள் பாதுகாப்பு வைப்பு கட்டணமாக ரூ.5 ஆயிரம், அவர்களின் பெயரில் தேசிய சேமிப்பு பத்திரமாகவோ அல்லது கிசான் விகாஸ் பத்திரமாகவோ எடுக்க வேண்டும். மேலும் உரிமக் கட்டணம் ரூ.50 செலுத்த வேண்டும் என ரங்கம் கோட்ட அஞ்சலக கண்காணிப்பாளர் விஜயா தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago