இலங்கை தமிழர்களுக்கு கரோனாசிறப்பு நிவாரண நிதியுதவியை ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.
செங்கல்பட்டில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை சார்பில், மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கத்தின் மூலம் அரசு மானியம் மற்றும் முகாமுக்கு வெளியே வாழும் இலங்கை தமிழர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண நிதியுதவியை சிறுபான்மையினர் நலத் துறை இயக்குநர் எஸ்.சுரேஷ்குமார், மாவட்ட ஆட்சியர் ஆ.ர.ராகுல் நாத் ஆகியோர் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் ஆகியோர் வழங்கினர்.
இதில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வசிக்கும் இலங்கை தமிழ் அகதிகள் 25 குடும்பங்களுக்கு 1 குடும்பத்துக்கு தலா ரூ.4,000 வீதம் 25 குடும்பங்களுக்கு ரூ.1 லட்சமும், சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத் துறை சார்பாக மாவட்ட முஸ்லிம் மகளிர் சங்கத்துக்கு தமிழ்நாடு அரசு மூலம் பெறப்பட்ட இணை மானிய தொகை ரூ.30 லட்சம் 321 பயனாளிகளுக்கும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் சென்னை மறுவாழ்வுத் துறை துணை இயக்குநர் ரமேஷ், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.மேனுவல்ராஜ், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறை அலுவலர் லலிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago