மயிலாடும்பாறை அகழாய்வில் கத்திகள், குடுவைகள் கண்டுபிடிப்பு :

By செய்திப்பிரிவு

மயிலாடும்பாறையில் அகழாய் வில் கத்திகள், 3 கால் குடுவைகள் கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் தொரகப்பள்ளி அருகே மயிலாடும்பாறையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. மயிலாடும்பாறை அகழாய்வு இயக்குநர் சக்திவேல், தொல்லியல் அகழாய்வு அலுவலர்கள் பரந்தாமன், வெங்கடகுரு பிரசன்னா மற்றும் தொல்லியல் ஆய்வு மாணவ, மாணவிகள் அகழாய்வில் ஈடுபட்டு வருகின்றனர். அகழாய்வில் ஏற்கெனவே 70 செ.மீ இரும்பு வாளும், 4 பானைகளும் கண்டறியப் பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் 3 கால்கள் உள்ள 4 சிறிய குடுவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக அகழாய்வு இயக்குநர் சக்திவேல் கூறியதாவது: மயிலாடும் பாறை அகழாய்வில் பெருங்கற் காலத்தை சேர்ந்த பொருட்கள் கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது இறந்தவர் களை புதைக்கும் குழியின் 4 மூலைகளிலும் 3 கத்தியும், 3 கால்கள் கொண்ட 4 சிறிய குடுவைகளும், ஒரு தண்ணீர் குவளையும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் 2,500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்காலத்தைச் சேர்ந்தவையாகும். தொடர்ந்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்