விவசாயிகளுக்கு பயிர் மேலாண்மை : செய்வது குறித்து பயிற்சி :

By செய்திப்பிரிவு

கே.பூசாரிப்பட்டி கிராமத்தில் பயிர் மேலாண்மை செய்வது குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கிருஷ்ணகிரி வட்டம் காட்டிநாயனப்பள்ளி ஊராட்சியில் கே.பூசாரிப்பட்டி கிராமத்தில், அட்மா திட்டத்தின் கீழ், 40 விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்படும் பூச்சி நோய்களை ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் முருகன் வரவேற்றார்.

மாவட்ட வேளாண்மை துணை இயக்குநர் சண்முகம் தலைமை வகித்தார். எலுமிச்சங்கிரி தொழில்நுட்ப வல்லுநர் ரமேஷ்பாபு பேசுகையில், நெல், ராகி, துவரை, உளுந்து, பச்சைபயிறு, காராமணி, கொள்ளு, நிலக்கடலை, தக்காளி, குண்டுமல்லி, முருங்கை பயிர்களில் ஏற்படும் சாறு உறிஞ்சும் பூச்சிகள், கடித்து உண்ணும் பூச்சிகள், நூற்புழுக்கள் தாக்குதல் மற்றும் பிற நோய்களின் தாக்குதல் குறித்து அறிகுறிகள், கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் இயற்கை விவசாயம் குறித்தும் விளக்கினார். வேளாண்மை அலுவலர் பிரியா, விவசாயிகளுக்கு அரசு மூலம் தற்போது வழங்கப்படும் மானியங்களான விதைகள், உயிர் உரங்கள், நுண்ணூட்ட உரங்கள் 50 சதவீதம் மானியத்தில் வழங்கப்படுகிறது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்