காஞ்சிபுரம் மாவட்டத்தில் வார்டு வாரியாக - வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி :

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட உள்ளதையொட்டி வார்டு வாரியாக வாக்காளர் பட்டியலை பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நடைபெறவில்லை. இந்த மாவட்டங்களில் செப்டம்பர் 15-க்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கெனவே சட்டமன்றத் தேர்தலுக்காக தயாரான வாக்காளர் பட்டியலை, உள்ளாட்சி தேர்தலுக்கு தகுந்தவாறு வார்டு வாரியாக பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் 11 மாவட்ட கவுன்சிலர்கள், 98 ஒன்றியக் கவுன்சிலர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. 1,938 கிராம வார்டு உறுப்பினர்கள், 5 ஊராட்சி ஒன்றியங்கள், 274 கிராம ஊராட்சிகள், ஒரு நகராட்சி, 51 நகராட்சி வார்டுகள், 5 பேரூராட்சி, 84 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதற்கு தகுந்தாற்போல் வாக்காளர் பட்டியல் பிரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

வாக்காளர் பட்டியல் பிரிக்கப்பட்டு அவை வெளியிடப்பட்ட பின்பு உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்புகள் வெளியாகலாம் என்று மாவட்ட ஆட்சியர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்