காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி வெளியிட்ட அறிக்கை:
காஞ்சிபுரம் அரசு குழந்தைகள் இல்லத்தில் ஆற்றுப்படுத்துநர்கள் மூலம் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க 3 பணியிடங்கள் மதிப்பூதிய அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதலில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 20 வயது முதல் 40 வயதுக்கு உள்பட்டவராக இருக்க வேண்டும்.
இவர்களது விண்ணப்பங்களை அனைத்து சான்றிதழ் நகல்களுடன் வரும் ஜூலை 28-ம் தேதி 5.30 மணிக்குள் கண்காணிப்பாளர், அரசு குழந்தைகள் இல்லம், எண்.31, சி, தாத்திமேடு, சாலபோகம் தெரு, காஞ்சிபுரம் 631 502. என்ற முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். தகுதியான நபர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்கள் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துதல் வல்லுநர்களைக் கொண்ட தேர்வுக் குழு மூலம் பரிசீலிக்கப்பட்டு, நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு செய்யப்படும் ஆற்றுப் படுத்துநர்களுக்கு மதிப்பூதியமாக 2 நாட்களுக்கு ஒருமுறை நாளொன்றுக்கு ரூ.500 மட்டும் வழங்கப்படும். இந்தப் பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago