விவசாய நிலத்தில் கழிவுநீர் கலப்பு : நரையூர் கிராமத்தில் விழுப்புரம் ஆட்சியர் ஆய்வு

By செய்திப்பிரிவு

விழுப்புரம் அருகே நரையூர் கிராமத்தில் உள்ள ஏரியிலிருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் வாய்க்காலில் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனை ஆட்சியர் மோகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது நரையூர் கிராமத்தினை சுற்றி அமைந்துள்ள விவசாய நிலங்களை ஆட்சியர் பார் வையிட்டார்.

அதன் பின், சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஏரிகளில் இருந்து விவசாய நிலத்திற்கு செல்லும் வாய்க்கால்களில் கழிவுநீர் சென்று விவசாய நிலம், நீரோடைகள் மற்றும் குடிநீர்இணைப்பு பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கலக்காதவாறு உரிய நடவ டிக்கை மேற்கொள்ள வேண்டும். தற்போது மழை பெய்துவரும் சூழ்நிலையில் நரையூர்கிராமத்தினை சுற்றியுள்ள கழிவுநீர் வாய் க்கால்களில் குப்பைகளால் அடைப்புகள் ஏற்பட்டு கழிவுநீர் ஓரிடத்தில் தேங்காதவாறு நாள்தோறும் தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என சம்பந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ஆட்சியர்மோகன் உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து நரையூர் கிராமத்தில் ஜல்ஜீவன்மிஷன் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு குடிநீர்இணைப்புகள் முறையாக வழங்கப்பட்டுள் ளதா என் பதையும், மழைநீர்சேகரிப்பு தொட்டி கள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதையும் ஆட்சியர் ஆய்வு செய்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்