கிருஷ்ணகிரி மாவட்ட பூசாரிகள் பேரமைப்பு சார்பில், ஆட்சியர் அலுவல கத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:
ஒரு கால பூஜை திட்டத்தில் பயன்பெறும் வகையில், பூசாரிகளுக்கு கரோனா நிவாரண நிதி வழங்கிய தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். பூசாரிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்க வேண்டும். ஓய்வூதிய திட்டத்தை எளிமைப்படுத்தி, பயன்பெறு பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். வீடுகளுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தின்கீழ் முற்றிலும் வருவாய் இல்லாத கோயில்கள் பயன்பெற வழிவகை செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட பூசாரிகள் நலவாரியம் கிடப்பில் உள்ளதை செயல்படுத்த துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில் சார்பில், மாவட்ட எல்லைக்குட்பட்ட கிராம கோயில்களுக்கு தீபம் ஏற்ற எண்ணெய் மற்றும் நெய்வேத்தியத்திற்கு அரிசி வழங்கும் திட்டத்தை ஏற்படுத்தித்தர வேண்டும். பெரிய கோயில்களில் தானமாக வரும் பசுக்களை அருகில் உள்ள கிராமக் கோயில்களுக்கு கோ-பூஜை மற்றும் அதன் பால் அபிஷேகத்திற்கு வழங்க உதவிட வேண்டும்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago