பழப்பயிர், காய்கறிகள் சாகுபடி செய்ய மானியம் வழங்கப்படும் என கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி தோட்டக்கலைத்துறை அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நிகழாண்டில், அரிய வகை பழங்களான அத்தி, டிராகன் பழம், பனை மற்றும் முருங்கை, வெங்காயம், மணத்தக்காளி கீரை சிஓ1, பப்பாளி கோ- 8 உள்ளிட்ட காய்கறி வகைகளை ஊக்குவிக்கும் வகையில் மானியங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
பந்தல் முறையில் சாகுபடி செய்யும் காய்கறி பயிர்களுக்கு ஹெக்டருக்கு ரூ.2 லட்சம் மானியம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, விருப்பம் உள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தங்கள் பகுதியில் உள்ள தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகத்தை அணுகி தங்கள் பெயரினை முன்பதிவு செய்து பயன்பெறலாம்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago