நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என, கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட ஊராட்சி அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஊராட்சிக் குழு கூட்டம் தலைவர் மணிமேகலை நாகராஜ் தலைமை வகித்தார். மாவட்ட ஊராட்சி செயலர் செல்வம் முன்னிலை வகித்தார். கூட்டத்தின் போது, தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பெரும் பங்கு வகிக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டுதவதற்கு எடுத்து வரும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.
தென்பெண்ணை ஆற்றின் துணை நதியான மார்கண்டேய நதிக்கு குறுக்கே யார்கோல் தடுப்பணை திட்டத்தால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் மாவட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம், விவசாய தொழிலுக்கு பாதகம் ஏற்படுத்தும் இந்த திட்டத்தை கர்நாடக அரசு கைவிட வேண்டும். ஏழை, எளிய தமிழக மாணவர்களின் மருத்துவ கனவு நிறைவேறிட நீட் தேர்வினை ரத்து செய்திட வேண்டும். பல்வேறு வளர்ச்சிப் பணிகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சியில் உள்ள அனைத்து ஊராட்சி குழு உறுப்பினர்களும், அலுவலர்களும் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago