நாகர்கோவில்: அம்மன் வழிபாட்டுக்கு உகந்த ஆடி செவ்வாய்தோறும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்களில் பெண் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்த ஆண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளால் கோயில்களில் ஆகம முறைப்படி வழிபாடு, பூஜை நிகழ்ச்சிகள் மட்டும் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள் அதிகமாக கூடுவதற்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆடி செவ்வாய் தினமான நேற்று அம்மன் கோயில்களில் கூட்டம் குறைவாக இருந்தது.
கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில், மண்டைக்காடு பகவதியம்மன் கோயில் உட்பட மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயில்கள் மற்றும் நகர, கிராம பகுதிகளில் உள்ள கோயில்களில் குறைவான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் நின்று வழிபட்டுச் சென்றனர். ஆடி செவ்வாய் மற்றும் வெள்ளிதோறும் கொழுக்கட்டை அவித்து பெண்கள் நேர்த்திகடன் செலுத்தும் ஆரல்வாய்மொழி அவ்வையாரம்மன் கோயிலில் கொழுக்கட்டை வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் ஏமாற்றமடைந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago