3 குடிசை வீடுகள் எரிந்து சேதம் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் குந்தவைநாச்சியார் அரசு கலைக் கல்லூரி அருகே உள்ள செங்கமலநாச்சியம்மன் கோயில் தெருவில் ஏராளமான குடிசை வீடுகள் உள்ளன.

இங்கு நேற்று காலை வீடுகளுக்கு அருகில் உள்ள உயரழுத்த மின்கம்பிகளில் காக்கைகள் கூட்டமாக அமர்ந்துள்ளன. அப்போது, மின்கம்பியில் ஏற்பட்ட உராய்வின் காரணமாக காக்கை ஒன்றின் மீது மின்சாரம் பாய்ந்ததில், அந்த காக்கை தூக்கி யெறியப்பட்டது.

இதில், எரிந்த நிலையில் காக்கை அருகில் இருந்து குடிசை வீட்டின் மேல் விழுந்ததால், சுந்தரம்(37), ரெங்காய்(70), ஆனந்தன்(36) ஆகியோரது வீடுகள் முற்றிலும் எரிந்து சேதமானது. தகவலறிந்த வந்த தீயணைப்பு துறையினர் தீ மேலும் பரவாமல் அணைத்தனர்.

இந்த தீ விபத்து குறித்து தஞ்சாவூர் தெற்கு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்