தஞ்சாவூர் அருகே - தனியார் கிடங்கில் பதுக்கப்பட்ட 1,500 மூட்டை நெல் பறிமுதல் :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் அருகே மொன்னையம்பட்டியில் தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,500 மூட்டை நெல் நேற்று பறிமுதல் செய்யப்பட்டது.

தஞ்சாவூர் அருகே வல்லம் - ஆலக்குடி சாலையில் மொன்னையம்பட்டி சாய்பாபா நகரில் தனியார் கிடங்கு உள்ளது. இதில், நெல், சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக அலுவலர்களுக்குத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் உமா மகேஸ்வரி, வட்டாட்சியர் பாலசுப்பிரமணியன், வல்லம் போலீஸார் ஆகியோர் நேற்று அந்த கிடங்குக்கு சென்று சோதனை நடத்தினர்.

இதில், அங்கு எந்த வித ஆவணமும் இன்றி 1,500 மூட்டை நெல், சாக்குகள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. அவை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டு, லாரிகள் மூலம் மேலவஸ்தா சாவடியில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டன. இந்த தனியார் கிடங்குக்கு இவ்வளவு நெல் மூட்டைகள், சாக்குகள் எப்படி வந்தன என்பது குறித்து வல்லம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்