மேலுமலை ஏரிக்கு நீர்வரும் பாதையை ஆக்கிரமித்துள்ளதாக மக்கள் புகார் :

By செய்திப்பிரிவு

மேலுமலை ஏரிக்கு நீர் வரும் பாதையை ஆக்கிரமித்து சாலை அமைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என கிருஷ்ணகிரி ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் மனு அளித்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மேலுமலை கிராம மக்கள் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது:

சூளகிரி ஊராட்சிக்கு உட்பட்ட மேலுமலையில் ஏரிக்கு வரும் நீர்வழித்தடம் ஆக் கிரமிப்பால் மழைக் காலங் களில் தண்ணீர் ஏரிக்கு வருவதில்லை. இதனால் 60 சதவீதம் விவசாயிகள் தங்களது விளைநிலங்களை விற்பனை செய்துவிட்டனர். இந்நிலையில், ஏரிக்கு தண்ணீர் வரும் பாதையை சிலர் ஆக்கிரமித்து சாலை அமைக்க முயற்சி செய்து வருகின்றனர். இதுதொடர்பாக ஏற்கெனவே, பலமுறை மனு அளிக்கப்பட்ட நிலையில், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்து பணிகளை நிறுத்தக்கோரி, ஊராட்சி மன்ற தலைவர், செயலாளருக்கு உத்தரவிட்டார். அதில், இனி வரும் காலங்களில் ஏரியை, ஏரிக்கு நீர் வரும் பாதையை யாரும் ஆக்கிரமிக்காமல் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதன் பிறகும் ஏரி மற்றும் நீர் வரும் பாதையில் சாலை அமைக்கும் பணி நடைபெற்றதால், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மேலுமலை ஏரிக்கு நீர் வரும் பாதையை ஆக்கிரமிப்பில் இருந்து பாதுகாக்கவும், ஆக்கிரமிப்பு இருந்தால் அகற்றவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. எனவே, ஏரி ஆக்கிரமிப்புகளை அகற்றியும், சாலை அமைக்கும் பணியை நிறுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்