செங்கல்பட்டு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மின் வாரிய தொழிலாளர்கள் சம்மேளன தொழிற்சங்கத்தின் மாநில இணை செயலாளர் அருள்தாஸ், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் (சி.ஐ.டி.யு) செங்கல்பட்டு கிளை செயலாளர் என்.பால்ராஜ், தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தின் மாநில இணை செயலாளர் சர்க்கரை, ஏஇஎஸ்யு தொழிற்சங்கத்தின் சென்னை மண்டல செயலாளர் கோவிந்தசாமி, தமிழ்நாடு மின்துறை பொறியாளர் அமைப்பின் செங்கல்பட்டு கிளை செயலாளர் மயில்வாகனன், பொறியாளர் சங்கத்தின் நிர்வாகி சங்கர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தொழிற்சங்கத்தினர், மின்சார வாரியத்தை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மத்திய அரசு கொண்டு வர உள்ள மின்சார சட்ட திருத்த மசோதா - 2021 அமலாகும் பட்சத்தில் விவசாயிகள், பொதுமக்கள், கைத்தறி, விசைத்தறி ஆகியவற்றுக்கு வழங்கப்படும் மின்சாரமும் ரத்தாகும் அபாய சூழல் ஏற்படும். எனவே, இந்த சட்டம் கடுமையாக அனைத்து மக்களையும் பாதிக்கக் கூடியது என இந்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கண்டன கோஷங்களை எழுப்பினர். முன்னதாக காலையில் அனைத்து உதவி பொறியாளர் அலுவலகங்களிலும், முற்பகலில் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மற்றும் மாலையில் மேற்பார்வை பொறியாளர் அலுவலகத்திலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago