வைகை அணை நீர்மட்டம் 68.25 அடியாக உயர்வு :

By செய்திப்பிரிவு

தேனி மாவட்டத்தில் தென்மேற்குப் பருவமழை கடந்த சில நாட்களாக பரவலாகப் பெய்து வருகிறது. இதனால், மூலவைகை, பாம்ப னாறு, கொட்டக்குடி மற்றும் சுருளியாற்றில் நீர்வரத்து அதி கரித்துள்ளது.

வைகை அணைக்கான நீர் வரத்து நேற்று விநாடிக்கு ஆயிரத்து 370 கன அடியாக உயர்ந்தது. 71 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் ஏற்கெனவே 67 அடிக்கும் மேல் இருந்த நிலையில் தற்போது கூடுதல் நீர்வரத்தால் நீர்மட்டம் 68.25 அடியாக உயர்ந்துள்ளது

இதனால் நீர்த்தேக்கப் பகுதி கடல்போல் காட்சியளிக்கிறது.

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதும் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படும் எனப் பொதுப்பணித் துறையினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்