கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளை மீறியதாக இதுவரை ரூ.1.91 கோடி அபராதமாக வசூல் செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரையில் 40 ஆயிரத்து 953 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டனர். அதில் 40 ஆயிரத்து 80 பேர் குணமடைந்துள்ளனர். சிகிச்சை பலனின்றி 318 பேர் இறந்துள்ளனர். தற்போது 523 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுவரை 4 லட்சத்து 50 ஆயிரத்து 621 பேர் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளனர். மாவட்டத்தில் 4 லட்சத்து 66 ஆயிரத்து 411 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இதேபோல் மாவட்டத்தில் கரோனா தடுப்பு விதிகளை மீறியதாக ரூ.1 கோடியே 91 லட்சத்து 14 ஆயிரத்து 1200 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago