‘ஆட்சியர் பெயரில் பணம் வசூலிப்பவர்களிடம் ஏமாற வேண்டாம்’ :

By செய்திப்பிரிவு

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், கடந்த ஜூன் 16-ம் தேதி பொறுப்பேற்றார்.

இந்நிலையில், ஆட்சியர் பெயரை பயன்படுத்தி, கரோனா நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளுக்கு தேவைப்படுவதாக, பொதுமக்களிடம் பேசிய மர்ம நபர்கள், பணத்தை வங்கியில் செலுத்தினால் போதும் என கூறி, ஒரு வங்கிக் கணக்கையும் பணம் செலுத்த விரும்பும் நபர்களிடம் வழங்கி வந்துள்ளனர்.

இதுகுறித்து சிலர், ஆட்சியருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பணம் வசூல் செய்யும் கும்பல் குறித்து விசாரிக்க போலீஸாருக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்

இதற்கிடையில் நேற்று ஆட்சியர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘மாவட்ட ஆட்சியர் பெயரை பயன்படுத்தி, சிலர் தொலைபேசி மூலம், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் பணம் செலுத்த வலியுறுத்துவதாக, வந்த புகாரின்பேரில், போலீஸார் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, ஆட்சியர் பெயரை பயன்படுத்தி, ஏதேனும் அழைப்புகள் வந்தால், எவரும் பணம் செலுத்தி ஏமாற வேண்டாம். மேலும், அதுபோன்ற அழைப்புகள் வந்தால், உடனடியாக போலீஸில் புகார் அளிக்க வேண்டும். ஆட்சியர் பெயரை தவறாக பயன்படுத்தினால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்