திருச்சி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டையில் - பிளஸ் 2 பயின்ற மாணவர்கள் 70,141 பேரும் தேர்ச்சி :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில், மாணவ, மாணவிகளுக்கான மதிப்பெண் நேற்று வெளியிடப்பட்டது.

திருச்சி மாவட்டத்தில் 257 பள்ளிகளைச் சேர்ந்த 14,723 மாணவர்கள், 17,333 மாணவிகள் என மொத்தம் 32,056 பேர் பிளஸ் 2 பொதுத் தேர்வெழுத தகுதி பெற்றிருந்தனர். ஆனால், கரோனா பரவல் காரணமாக பிளஸ் 2 பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இதனடிப்படையில், பிளஸ் 2 மாணவ, மாணவிகள் 32,056 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். கடந்த கல்வி ஆண்டில் திருச்சி மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி விகிதம் 95.94 சதவீதமாக இருந்த நிலையில், நிகழ் கல்வியாண்டில் முழு தேர்ச்சி கிடைத்துள்ளது.

இதில், தாத்தையங்கார்பேட்டை தனியார் பள்ளி மாணவர் ஒருவர் மட்டும் வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண்களைப் பெற்றுள்ளார்.

கரூர் மாவட்டத்தில் 107 பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 5,177 மாணவர்கள், 5,552 மாணவிகள் என மொத்தம் 10,729 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் 74 பள்ளிகளில் 3,904 மாணவர்கள், 4,029 மாணவிகள் என மொத்தம் 7,933 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 150 அரசு மேல்நிலைப் பள்ளிகள் உட்பட 174 பள்ளிகளில் 9,054 மாணவர்கள், 10,369 மாணவிகள் என மொத்தம் 19,423 பேரும் தேர்ச்சி பெற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்