ஆடி முதல் ஞாயிற்றுக்கிழமையான நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் திருவேற்காடு தேவி கருமாரியம்மன் கோயில்,பெரியபாளையம் பவானி அம்மன் கோயில், புட்லூர் அங்காளபரமேஸ்வரி கோயில், திருமுல்லைவாயில் பச்சையம்மன் கோயில் உள்ளிட்ட அம்மன் கோயில்களில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்களின் வெப்ப நிலை அறிதல், கைகளில் கிருமி நாசினி தடவுதல் உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை கோயில் நிர்வாகம் மேற்கொண்டாலும், சமூக இடைவெளியை பக்தர்கள் கடைப்பிடிக்காமல் சுவாமி தரிசனம் செய்துள்ளது சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாவட்டத்தில் அம்மன் கோயில்களில் நேற்று ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்களின் எண்ணிக்கை, கரோனா வைரஸ் பரவலுக்கு முன்பு ஆடி மாதத்தில் குவிந்த பக்தர்களின் எண்ணிக்கையை விட குறைவுதான் என கோயில்களின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago