தன்னார்வ அமைப்புகள் சார்பில் வசதியற்ற ஏழை முஸ்லிம் ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைக்கும் நிகழ்ச்சி விழுப்புரத்தில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச் சிக்கு விழுப்புரம் மாவட்ட அரசு தலைமை காஜி முஹம்மது அஷ்ரப் அலி தலைமை தாங்கி னார்.
மாவட்ட உலமாக்கள் சபை,விழுப்புரம் நகர அனைத்துமஹால்லா இமாம்கள், நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு பைத்துல்மால் ஒருங் கிணைப்பாளர் இதயத்துல்லா சிறப்பு அழைப்பாளராகக் கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில், 6 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைத்தார். திருமண ஜோடிகளுக்கு கட்டில், மெத்தை, பாத்திரங்கள், மளிகைப் பொருள்கள் உள்ளிட்ட சீர்வரிசை வழங்கப் பட்டன.
விழாவில் கலந்து கொண்ட வர்களுக்கு திருமண விருந்தும் கொடுக்கப்பட்டது.
தன்னார்வ அமைப்பு நிர் வாகிகள் தமிமுல் அன்சாரி, பக்ருதீன் அலி அகமது, மீரான், அன்வர்தீன், சையது முகமது ரவுத்தர், தாஜூதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago