சின்னாளபட்டியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்ய அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு செய்தார்.
பின்னர், அவர் செய்தியாளர் களிடம் கூறியது: சின்னாளபட்டியில் சாயக்கழிவு சுத்திகரிப்பு நிலையம் அமைக்க வேண்டும் என சட்டப்பேரவையில் கோரிக்கை விடுத்தேன். ஆனால், அது கடந்த ஆட்சிக்காலத்தில் கிடப்பில் போடப்பட்டது.
தற்போது சாயத்தொழில் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் அலுவலர்கள், வருவாய்த் துறையினர் சார்பில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ச.விசாகன், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராசு, மாசு கட்டுப்பாட்டு வாரிய கோட்டப் பொறியாளர் சந்திரசேகரன், ஆத் தூர் வட்டாட்சியர் தர் ஆகியோர் உடன் இருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago