திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி அருகே எண்கண் ஊராட்சிக்குட்பட்ட தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஆட்சியர் ப.காயத்ரி கிருஷ்ணன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
திருவாரூர் மாவட்டத்தில் நடப்பு காரீப் பருவத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் நடத்தப்படும் அனைத்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களிலும் கள ஆய்வு செய்ததில், 14,016 டன் நெல் மூட்டைகள் திறந்தவெளியில் பாதுகாப்பற்ற நிலையில் இருப்பு வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது.அவை திறந்தவெளி சேமிப்பு மையம், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் நெல் அரைவைக்காக உள்மண்டலம், அயல் மண்டலங்களுக்கு பாதுகாப்பாக நகர்வு செய்யப்பட்டுள்ளன. இதேபோல, கொள்முதல் செய்யப்பட்ட மற்ற நெல் மூட்டைகள் 26,042 டன்னும் தேக்கமடையாமல் நகர்வு செய்யப்பட்டுள்ளன என்றார்.
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மாவட்ட மேலாளர்கள் பாஸ்கரன், தியாகராஜன், துணை மேலாளர் ராஜேந்திரன், உதவி மேலாளர் மூர்த்தி மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago