தஞ்சாவூரில் தனியார் நிறுவனத்தின் இரவுநேர காவலாளி கல்லால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
தஞ்சாவூரில் நாகை சாலையில் உள்ள விஜயலட்சுமி நகரைச் சேர்ந்தவர் ஜெயபால்(74). தளவாய்பாளையம் ரயில்வே கேட் அருகிலுள்ள தனியார் பைப் நிறுவனத்தில் இரவு நேர காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இவர், நேற்று காலை நிறுவனத்தின் வாசலில் கல்லால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். இதை அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து, போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில், எஸ்.பி தேஷ்முக் சேகர் சஞ்சய், பாபநாசம் டிஎஸ்பி ஆனந்தன், அம்மாபேட்டை இன்ஸ்பெக்டர் பேபி மற்றும் போலீஸார் அங்கு சென்று, ஜெயபாலின் சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜெயபால் வைத்திருந்த செல்போன், இருசக்கர வாகனம் ஆகியவை காணாமல் போய் உள்ள நிலையில், இந்தக் கொலை தொடர்பாக அம்மாபேட்டை போலீஸார் வழக்கு பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago