வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் - கரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கை : காணொலி காட்சி மூலம் தலைமை செயலாளர் ஆலோசனை

By செய்திப்பிரிவு

வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் கரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவ டிக்கை, பருவமழை பாதுகாப்பு தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆகியோருடன் அரசு தலைமை செயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கரோனா 2-வது அலை பாதிப்பு படிப்படியாக குறைந்துள்ளதால், அரசு பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை இம்மாதம் இறுதி வரை நீடித்துள்ளது.

இந்நிலையில், கரோனா 3-வது அலையை எதிர்கொள்ளவும், தற்போது மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் மாவட்ட ஆட்சியர்களுடன், சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அரசு தலைமைசெயலாளர் இறையன்பு காணொலி காட்சி மூலம் நேற்று கலந்தாலோசனை நடத்தினார்.

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் காணொலி காட்சி மூலம் வேலூர் மாவட்டத்தில் மேற் கொள்ளப்பட்டு வரும் முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள், தடுப் பூசி செலுத்தியவர்கள் விவரம், தடுப்பூசி கையிருப்பு விவரம், தென்மேற்கு பருவமழை காரணமாக எடுக்கப்பட்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளரிடம் விரிவாக விளக்கம் அளித்தார்.

அதேபோல, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆட்சியர் அலுவலகத்தில் இருந்தபடி மாவட்டத்தில் மேற்கொள்ளப் பட்டு வரும் கரோனா 3-வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? வேளாண் பொருட்கள் பாதுகாப்பு, முதலைமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் உணவு பொருள் வழங்கல் பணிகள் குறித்து விளக்கமளித்தார்.

அப்போது, அரசு உயர் அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்