விதிமீறிய ஆட்டோ ஓட்டுநர்களிடம் அபராதம் வசூல் :

By செய்திப்பிரிவு

கரோனா பொது முடக்கத்தால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆட்டோக்கள் இயக்கப்படாமல் இருந்தது. இதைத்தொடர்ந்து, விதிமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து ஆட்டோக்கள் வழக்கம்போல் ஓடத்தொடங்கின.

இந்நிலையில், வேலூரில் விதிமீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவதாக வந்த புகாரை தொடர்ந்து, வேலூர் போக்குவரத்து காவல் துறையினர் புதிய மற்றும் பழைய பேருந்து நிலையங்கள், கிரீன் சர்க்கிள், ஆட்சியர் அலுவலக சந்திப்பு உள்ளிட்ட இடங்களில் ஆய்வு நடத்தினர்.

அப்போது, போக்குவரத்து விதிமீறியதாக 106 ஆட்டோ ஓட்டுநர்களிடம் இருந்து ரூ.50 ஆயிரம் அபராதத்தை போக்குவரத்து காவல் துறை யினர் வசூலித்து, தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் ஆட்டோக்கள் பறிமுதல் செய்து, ஓட்டுநர் உரிமம் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்