உதகையில் இயங்கிவரும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் மண்ணெண்ணெய் நிலையம் (என்சிஎம்எஸ்) மூடப்படுவதால், நீலகிரி கூட்டுறவு நிறுவனம் நடத்தும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் மண்ணெண்ணெய் விநியோகிக்கப்படும் என ஆட்சியா் ஜெ.இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘நீலகிரி மாவட்டத்தில் உதகை நகரில் செயல்பட்டு வரும் நீலகிரி கூட்டுறவு விற்பனைச் சங்கம் நடத்தி வரும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையம் மூடப்படுகிறது.
அங்கு மண்ணெண்ணெய் பெற்று வரும் மிஷினரி ஹில், பாம்பே கேசில், கார்டன் சாலை, மார்க்கெட்-2, தமிழ்நாடு அரசு ஊழியா் கூட்டுறவு பண்டகம்-3, தலைமை தபால் நிலையம் ஆகிய நியாயவிலைக் கடைகளின் குடும்ப அட்டைதாரா்கள் ஜூலை 17-ம் தேதியில் இருந்து நீலகிரி கூட்டுறவு நிறுவனம் நடத்தும் மண்ணெண்ணெய் விற்பனை நிலையத்தில் தங்களது குடும்ப அட்டைக்கு உரிய மண்ணெண்ணெயைப் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago