ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கவுன்சில் சார்பில் : செயற்கை இழை ஆடை உற்பத்தி கருத்தரங்கம்

By செய்திப்பிரிவு

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மற்றும் ரிலையன்ஸ் சார்பில், செயற்கை இழை ஆடை உற்பத்தி குறித்த கருத்தரங்கம் இணையம் வழியாக நடைபெற்றது.

இதில் ஏ.இ.பி.சி. தலைவரும், இந்திய ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவருமான ஏ.சக்திவேல் பேசும்போது ‘‘இந்தியாவில் தேவையான அளவு செயற்கை இழைகள் உள்ளன. இருப்பினும் சீரான விலையில், செயற்கை இழை துணி ரகங்கள் கிடைப்பதில்லை. ரிலையன்ஸ் நிறுவனம், ஏற்றுமதி நிறுவனங்களின் துணி தேவையை பூர்த்தி செய்யும்’’ என்றார்.

ஆர்.ஐ.எல். நிறுவன விற்பனை பிரிவு தலைவர் ரித்தேஷ் சர்மா பேசும்போது ‘‘ஆர்.ஐ.எல். நிறுவனம், ஹப் எக்ஸ்சலன்ஸ் (எச்.இ.பி.சி.) திட்டத்தை செயல்படுத்துகிறது. நூற்பாலை, நெசவு, பின்னல் மற்றும் பிராசசிங் சார்ந்த 55-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இதில் உறுப்பினராக உள்ளன. மேலும், பல நிறுவனங்கள் இந்த திட்டத்தில் தங்களை இணைத்துக்கொள்ள முடியும்’’ என்றார்.

பாரகான் அப்பேரல்ஸ் நிறுவன பிரதிநிதி ரோசன் பெய்ட் பேசும்போது, ‘‘செயற்கை இழை ஆடை பயன்பாடு அதிகமாக இருக்கிறது. உலக அளவில் ரூ. 36.50 லட்சம் கோடி மதிப்பில் செயற்கை இழை ஆடை வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவின் மொத்த ஆடை ஏற்றுமதியில் ரூ. 11 ஆயிரம் கோடி, செயற்கை இழை ஆடைகளின் பங்களிப்பாக இருக்கிறது’’ என்றார். ஏராளமானவர்கள் இந்த கருத்தரங்கில் பங்கேற்று தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்