சுதந்திரப் போராட்ட தியாகிகள் உருவப்படங்களுக்கு அமைச்சர்கள் மரியாதை :

By செய்திப்பிரிவு

:தியாகிகள் தினத்தையொட்டி, திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் நகராட்சி அலுவலக வளாகத்தில் சுதந்திர போராட்ட தியாகிகள் ஆர்யா (எ) பாஷ்யம், சங்கரலிங்கனார், செண்பகராமன் ஆகியோரது உருவப்படங்களுக்கு, அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன் (செய்தித் துறை), என்.கயல்விழி செல்வராஜ் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை) ஆகியோர் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசியதாவது:

நாட்டின் விடுதலைக்காக எண்ணற்ற தியாகிகள் பாடுபட்டனர். வெள்ளையர் ஆதிக்கத்திலிருந்து நாடு விடுதலை பெற தமிழகத்திலும் தன்னலம் கருதாமலும், அர்ப்பணிப்புடனும் பல்வேறு போராட்டங்களில் கலந்துகொண்டு சிறை சென்றவர்கள் பலர் உள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஜுலை 17-ம் தேதியை தியாகிகள் தினமாக கொண்டாடப்பட வேண்டுமென, மறைந்த முதல்வர் கருணாநிதி அறிவுறுத்தியிருந்தார். அவரது ஆட்சிக் காலத்தில்தான், சென்னை காந்தி மண்டப வளாகத்தில் 1998-ம் ஆண்டு தியாகிகள் மணிமண்டபம் திறக்கப்பட்டது. 2008-ம் ஆண்டு செண்பகராமன் சிலை, 1999-ம் ஆண்டு சங்கரலிங்கனார், சுதந்திர போராட்ட வீரர் ஆர்யா பாஷ்யம் ஆகியோரது சிலைகளை திறந்து வைத்தார். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் தாராபுரம் சார் ஆட்சியர் ஆனந்தமோகன், வெள்ளகோவில் நகராட்சி ஆணையர் த.சசிகலா உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்