சிவகங்கை அரசு மருத்துவமனை - அம்மா உணவகத்தை மூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவு :

By செய்திப்பிரிவு

கவுன்சிலர்கள் நெருக்கடியால் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அம்மா உணவகத்தை மூட ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கும் அம்மா உணவகத்துக்காக ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் சார்பில் மாதம்தோறும் ரூ.2 லட்சம் செலவு செய்யப்படுகிறது. ஆனால் உணவகம் மூலம் ரூ.60 ஆயிரம் மட்டுமே வருமானம் கிடைக்கிறது.

இதனால் ஊராட்சி ஒன்றியத்துக்கு ஆண்டுக்கு ரூ.12 லட்சம் கூடுதலாக செலவாகிறது. இந்த தொகையை பொது நிதியில் இருந்து எடுப்பதால் கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து அம்மா உணவகத்தை மூட ஒன்றிய நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இது குறித்து ஊரக வளர்ச்சித் துறை அதிகாரி ஒருவர் கூறிய தாவது: மற்ற மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உணவகங்களை நகராட்சி, மாநகராட்சிகளே நடத்துகின்றன. ஆனால் இங்கு ஊராட்சி ஒன்றியம் சார்பில் நடத்தப்படுகிறது. ஆனால், அதற்குரிய நிதி ஒதுக்கீடு இல்லை. பொது நிதியிலிருந்து செலவழிக்க கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். மருத்துவக் கல்லூரி நிர்வாகமும் அம்மா உணவகத்தை நடத்த முன்வரவில்லை. இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவிக்க உள்ளோம் என்று கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்