இருளர் காலனியில் சேதமான குடியிருப்புகள் மாற்ற நடவடிக்கை : பர்கூர் எம்எல்ஏ மதியழகன் உறுதி

By செய்திப்பிரிவு

பர்கூர் தொகுதிக்கு உட்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி மற்றும் பாகிமானூர் இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் சேதமான குடியிருப்புகளை மாற்றித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என மதியழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் எம்எல்ஏ மதியழகன், தனது தொகுதிக்குட்பட்ட ஜிட்டோபனப்பள்ளி காலனி, பாகிமானூர் இருளர் காலனி பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது பொதுமக்கள் கூறுகையில், தங்களுக்கு சீரான குடிநீர், மின்சாரம் மற்றும் கழிவுநீர் செல்ல போதுமான கால்வாய் வசதி உட்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் சிரமத்துடன் வசித்து வருவதாக தெரிவித்தனர்.எம்எல்ஏ கூறும்போது, இருளர் இன மக்கள் வசிக்கும் தொகுப்பு வீடுகளை ஆய்வு செய்து, தேவையான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது. தற்போது முதல்கட்டமாக மழையினால் சேதமடைந்த குடியிருப்புகளை சீர் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

ஆய்வின் போது, ஊராட்சி செயலாளர்கள், வருவாய் ஆய்வாளர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்