வேலூர் மாவட்ட விவசாயிகள் வேளாண் கருவிகளுடன் கூடிய டிராக்டரை குறைந்த வாடகைக்கு பயன்படுதிக்கொள்ளலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘வேலூர் மாவட்டத்தில் விவசாயி களுக்கு பயன் அளிக்கும் வகை யில் ஒரு மண் தள்ளும் இயந்திரம், 3 டிராக்டர்கள், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் மற்றும் டயர் வகை மண் அள்ளும் இயந்திரம் தலா ஒன்று என உள்ளது.
அனைத்து கருவிகளும் டிராக்டருடன் மணிக்கு ரூ.340 கட்டணமும், மண் அள்ளு வதற்கும், பண்ணை குட்டைகள் அமைத்திடவும், புதர்களை அகற்றவும், டிராக் வகை மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.1,440 கட்டணமும், டயர் வகை மண் அள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.660 வீதமும், நிலம் சமன் செய்வதற்கு மண் தள்ளும் இயந்திரம் மணிக்கு ரூ.840 வீதமும் வாடகைக்கு விடப்படும்.
மேற்கண்ட இயந்திரங்கள், கருவிகள் தேவை இருந்தால் உதவி செயற்பொறியாளர் (வேலூர்): 0146-2907182, உதவி செயற் பொறியாளர் (வேலூர்) 94871-05115 அல்லது, பேரணாம்பட்டு இள நிலை பொறியாளரை 98944-13644 அல்லது குடியாத்தம் உதவி பொறியாளரை 94448-70289 அல்லது காட்பாடி உதவி செயற்பொறியாளரை 94430-06742 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’’ என்று தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago