மாதப்பூர் ஊராட்சியில் குடிநீர் இணைப்புக்கு கூடுதல் தொகை வசூலிப்பதாக புகார் :

By செய்திப்பிரிவு

பல்லடம் அருகே மாதப்பூர் ஊராட்சி துணைத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள், திருப்பூர் ஆட்சியர் சு.வினீத்திடம் அளித்த மனுவில், "மாதப்பூர் ஊராட்சியில் பாஜகவை சேர்ந்த அசோக்குமார் தலைவராக உள்ளார். அவர் வீட்டுக்கு கட்டிட அனுமதி பெறாமல், வீட்டு வரி போட்டு தனது அதிகாரத்தை முறைகேடாக பயன்படுத்தியுள்ளார். கடந்தஆண்டு 197 பேருக்கு குடிநீர் குழாய் இணைப்புவழங்கப்பட்டது. ஊராட்சி சார்பில் ரூ.2 ஆயிரத்து 380-க்கு மட்டுமே ரசீது வழங்கப்பட்டது. ஆனால், பொதுமக்களிடம் ரூ.15 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஊராட்சியில் புதிதாக எந்த வேலையும் செய்யவில்லை. மாதப்பூர் ஊராட்சியில் இரண்டு ஆண்டுகளாக செயலர் பதவி காலியாக உள்ளது. அதற்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றும், இன்று வரை நிரப்பப்படாமல் உள்ளது. இதுதொடர்பாக ஆட்சியர் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளனர்.

மாதப்பூர் ஊராட்சித் தலைவர் அசோக்குமார் கூறும்போது, "ஊராட்சி துணைத் தலைவர் பாலசுப்பிரமணியம் அளித்த புகார் தொடர்பாக, ஏற்கெனவே வட்ட வளர்ச்சி அலுவலர் உள்ளிட்டோர் விசாரித்துள்ளனர். அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இப்படி செய்துள்ளனர்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்