சிறுவன் கொலை; தாய்மாமன் கைது :

By செய்திப்பிரிவு

நீலகிரி மாவட்டம் உதகை அருகே ஜல்லிகுழி பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு ஜீவன் (6) என்ற மகன் இருந்தார். கருத்து வேறுபாடு காரணமாக தம்பதி பிரிந்து வாழ்ந்து வந்ததாக தெரிகிறது. ஷாலினி மற்றும் அவரது மகன் ஜீவன் ஆகியோர், அதே பகுதியிலு தாயார் விஜயா வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் ஜீவன் கட்டிலில் இருந்து கீழே விழுந்ததில், தலையில் காயம் ஏற்பட்டதாக உதகை அரசு மருத்துவமனைக்கு உறவினர்கள் கொண்டு வந்துள்ளனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.

சிறுவன் தலையில் வெட்டுகாயம்போல இருந்ததால் சந்தேகம் எழுந்துள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட தகவலின்பேரில், உதகை பி-1 போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். இதில், ஷாலினியின் சித்தப்பா மகன் விஜயகுமார் (25), சிறுவனின் தலையில் அரத்தை கொண்டு அடித்துக் கொலை செய்தது தெரியவந்தது. தன்னை அடிக்கடி சிறுவன் கேலி செய்ததாகவும், அதற்காக அவனை அடித்தபோது உயிரிழந்துவிட்டதாகவும் விஜயகுமார் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து, விஜயகுமாரை உதகை பி-1 போலீஸார் கைது செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்