திருப்பூர் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் கூறும்போது, "திருப்பூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை மாற்றுத்திறனாளிகளும், கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வது அவசியம். கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத மாற்றுத்திறனாளிகளுக்கு, வரும் 19-ம் தேதி முதல் 29-ம் தேதி வரை, கீழ்க்கண்ட அட்டவணைப்படி சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை, ஆதார் அட்டை நகல்களை சமர்ப்பித்து தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். தினமும் காலை 10.30 முதல் பிற்பகல் 2 மணி வரை முகாம் நடைபெறும்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 19-ம்தேதியும்,அவிநாசி வட்டாட்சியர்அலுவலகத்தில் 20-ம் தேதியும், தாராபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 22-ம் தேதியும், காங்கயம்வட்டாட்சியர் அலுவலகத்தில் 23-ம்தேதியும் சிறப்பு முகாம்கள்நடைபெறுகின்றன.
இதேபோல, ஊத்துக்குளி வட்டாட்சியர் அலுவலகத்தில் 26-ம் தேதியும், பல்லடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 27-ம் தேதியும், மடத்துக்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 28-ம் தேதியும், உடுமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் 29-ம் தேதியும்சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.
மாற்றுத்திறனாளிகள் மத்தியில்கரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கான ஆர்வம் குறைவாக இருப்பதால், அவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இந்த சிறப்பு முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது" என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago