மாநில உரிமையை மீட்டுத் தருவது மத்திய அரசின் தலையாய கடமையாகும் என வேப்பனப்பள்ளியில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்எல்ஏ தெரிவித்தார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளியில் அதிமுக எம்எல்ஏ அலுவலகம் திறப்பு விழா நேற்று நடந்தது. அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், வேப்பனப்பள்ளி எம்எல்ஏவுமான கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். கிருஷ்ணகிரி எம்எல்ஏ அசோக்குமார் முன்னிலை வகித்தார். அலுவலகத்தை திறந்து வைத்து கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
வேப்பனப்பள்ளி தொகுதி மக்களின் நலன் கருதி, ராயக்கோட்டை, சூளகிரியிலும் எம்எல்ஏ அலுவலகம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக தொண்டர்களின் உணர்வை தூண்டி வேகப்படுத்துவதற்காக, அக்கட்சியின் தலைவர் 2026-ம் ஆண்டு தமிழகத்தில் பாஜக ஆட்சி அமையும் என கருத்து தெரிவித்து இருப்பார். நாட்டு மக்கள் யாரை தேர்வு செய்வார்கள் என்பது குறித்து 2026-ல் தான் தெரியும்.
பிற மாநிலத்தில் இருந்து வரும் தாவாக்களால், மற்றொரு மாநிலம் பாதிக்கப்படும் போது, மத்திய அரசு நியாயமாக செயல்பட்டு மாநில உரிமையை மீட்டுத் தருவது தலையாய கடமையாகும்.
நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு இணையாக மத்தியஅரசு, மாநிலங்களுக்கு இடையே நிலவும் பிரச்சினைகளை தீர்த்து வைக்க வேண்டும் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago