புதுக்கோட்டை மாவட்டம் திருவரங் குளம் ஊராட்சி ஒன்றியம் பாச்சிக் கோட்டை ஊராட்சித் தலைவர் என்.பன்னீர்செல்வம்(56).
இவரிடம், கோவையில் தனியார் மருத்துவமனை நடத்தி வரும் மாதேஸ்வரன் என்பவர், மருத்துவ மனையை மேம்படுத்த ரூ.100 கோடி கடன் பெற்றுத் தருமாறு கேட்டுள்ளார். அதற்கு பன்னீர்செல்வத்திடம் கமிஷன், ஆவணச் செலவு என ரூ.2.85 கோடியை மாதேஸ்வரன் கொடுத்துள்ளார். ஆனாலும் பன்னீர் செல்வம் கடன் பெற்றுத் தராததுடன், கொடுத்த பணத்தை திருப்பிக் கேட்டதற்கு மிரட்டுவதாக கோவை குற்றப்பிரிவில் மாதேஸ்வரன் அண்மையில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், தலைமறைவாகி இருந்த பன்னீர்செல்வம், அவரது நண்பர் செல்வக்குமார் ஆகியோரை கோவை தனிப்படை போலீஸார் சென்னையில் நேற்று முன்தினம் கைது செய்தனர். அப்போது, அவரி டம் இருந்து 2 கார்கள், ரூ.49.85 கோடி மற்றும் ரூ.49.95 கோடி தொகைக்கான 2 போலி வரை வோலைகள் கைப்பற்றப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதனிடையே குறைந்த வட்டிக்கு கடன் வாங்கித் தருவதாகக் கூறி, தன்னிடம் பன்னீர்செல்வம் ரூ.1.33 கோடியை வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிட்டதாக, திருச்சி துவாக் குடியில் மரக்கடை நடத்தி வரும் தினேஷ் என்பவர் புதுக்கோட்டை குற்றப்பிரிவு போலீஸில் புகார் அளித்திருந்தார். இதுகுறித்து போலீ ஸார் நேற்று வழக்கு பதிவு செய்துள் ளனர். இதுதவிர, பன்னீர்செல்வம் மீது 20-க்கும் மேற்பட்ட மோசடி, கொலை மிரட்டல் போன்ற வழக் குகள் நிலுவையில் இருப்பது குறிப் பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago