புதுக்கோட்டை மாவட்டம் திருவரங்குளம் அருகே வேப்பங்குடி ஊராட்சி தேத் தான்பட்டியில் குடிநீருக்காக ஆழ்துளை கிணறு அமைப் பதற்கு ரூ.14.32 லட்சத்துக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனால், ஏற்கெனவே 2 இடங்களை தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது மேலும் ஒரு இடம் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. ஆளுங்கட்சியினர் அவரவர் விருப்பத்துக்கு இடத்தை மாற்றாமல் ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 2 இடங்களில் ஒரு இடத்தில் ஆழ்துளை கிணறு அமைக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் ஆர்.சொர்ணக்குமார் தலைமையில் தேத்தான்பட்டி மக்கள் திருவரங்குளத்தில் நேற்று சாலை மறியலில் ஈடுபடுவதற்காக ஊர்வலமாக சென்றனர்.
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே சென்ற மக்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆலங்குடி வட்டாட்சியர் பொன்மலர், ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை தங்கமணி, வட்டார வளர்ச்சி அலுவலர் கள் உள்ளிட்டோர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இரு வாரங்களுக்குள் ஆழ் துளை கிணறு அமைக்கும் பணி நடைபெறும் என உறுதியளிக்கப்பட்டதை யடுத்து போராட்டம் கைவிடப் பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago