தஞ்சாவூர் அருகே மாரியம் மன்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன்(38). இவர், தஞ்சாவூர் தெற்கு மாவட்ட அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை தலைவராக உள்ளார். இவரது மகள் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், தனது மகளின் வகுப்பில் படிக்கும் மற்றொரு மாணவிக்கு வேல் முருகன், வாட்ஸ்அப்பில் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். பின்னர், அந்த மாணவியின் வீட்டுக்குச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால் மன உளைச்சல் அடைந்த அந்த மாணவி வல்லம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின்பேரில் இன்ஸ்பெக்டர் கலைவாணி மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து வேல்முருகனை போக்ஸோ சட்டத்தில் நேற்று முன்தினம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago