திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் முத்தூரிலுள்ள பெட்ரோல் பங்க்கில் பணியாற்றியவர் சசிக்குமார்(23). பங்க்கில் ரூ.50 ஆயிரத்தை சசிக்குமார் திருடிவிட்டதாக எழுந்த புகாரின் பேரில் வெள்ளகோவில் காவல்துறையினர் கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி4-ம் தேதி அவரிடம்விசாரணையில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து வீட்டில்தூக்கிட்டு சசிக்குமார் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், வழக்கை விசாரித்தகாங்கயம் காவல் துணை கண்காணிப்பாளர், சசிக்குமார் குடிபோதையில் இருந்ததால் வாகனத்தில் செல்லும்போது விபத்தில் இறந்துவிட்டதாக தெரிவித்துவிட்டு வழக்கை முடித்தனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்படி, வழக்கை முறையாக விசாரிக்கவில்லையெனக் கூறி,சசிக்குமாரின் உறவினர் சார்பில்திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வுநீதிமன்றத்தில் தனி முறையீட்டை (ஆட்சேபனை மனுவை) முறையிட்டுவாதாடப்பட்டது. குற்றப் பத்திரிகையில் சொல்லியது போன்று,சசிக்குமார் குடித்துவிட்டு விழுந்ததற்கான ஆதாரம் இல்லையெனக்கூறி, அவரது உடற்கூராய்வுஅறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்த நிலையில், அரசு தரப்பு குற்றப் பத்திரிகையை, திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றநீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் கடந்த 12-ம் தேதி தள்ளுபடி செய்தார். மேலும், திருப்பூர் மாவட்டஎஸ்.பி.-க்கு, 60 நாட்களுக்குள் வேறொரு காவல் துறை அதிகாரியைநியமித்து, அறிக்கை தாக்கல்செய்ய வேண்டும் என, நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். மனுதாரர்கள் தரப்பில்ஆஜரான வழக்கறிஞர்கள் பாப்பாமோகன், பாண்டியன்உத்தரவு நகலை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சசாங் சாயிடம்நேற்று வழங்கினர். வழக்கறிஞர்கள் கூறும்போது, ‘‘நீதிமன்ற வழிகாட்டுதல்படி, உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி எஸ்.பி.யிடம் மனு அளித்துள்ளோம்,’’ என்றனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago