ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களில் கல்வி விழிப்புணர்வு முகாம் :

By செய்திப்பிரிவு

கள்ளக்குறிச்சி அடுத்த இந்திலியில் உள்ள டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களில் சார்பாக கல்வி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காமராஜர் தினவிழா நேற்று கொண் டாடப்பட்டது.

டாக்டர் ஆர்.கே.எஸ். கலை மற்றும்அறிவியில் கல்லூரியின் உதவிப்பேராசி ரியர் முனைவர் க.ரவிச்சந்திரன் வரவேற்புரை நிகழ்த்தினார். டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவனங்களின் தலைவர் மருத்துவர்.க.மகுடமுடி தலை மையுரையாற்றினார். பசுமைக் காவலர் அ.மதிவாணன் சிறப்புரையாற்றினார். டாக்டர் ஆர்.கே.எஸ். கல்வி நிறுவ னங்களின் நிர்வாக அலுவலர் முனைவர் கு.மோகனசுந்தர் மற்றும் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர்.பெ.ஜான்விக்டர் ஆகியோர் திட்டங்கள் மற்றும் திறன் மேம்பாடு குறித்து எடுத்துரைத்தனர்.

காமராஜரின் கனவை நனவாக்கும் வகையில் நிறுவனங்களின் செயல் பாடுகள் அமைய வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் கல்வியியல் கல்லூரியின் முதல்வர் ஜி.ஜெயசீலன், பள்ளி முதல்வர் மாலதி, ஹெல்த் சயின்ஸ் பொறுப்பாசிரியர்கள் மேகலை, பவுலின் சங்கீதா, பாராமெடிக்கல் பொறுப்பாசிரியர் துர்கா ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் உரை யாற்றினர்.

இந்நிகழ்ச்சியில் நிறுவனத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் கரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி கலந்து கொண்டனர். கணிதத்துறை துறைத்தலைவி இ.நர்கீஸ் பேகம் நன்றி கூறினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்