அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மன நலக் குறைபாடுகளுக்கு சிகிச்சை அளிக்க மனநலத்துறை உள்ளது. தினமும் ஒவ்வொரு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் 50 பேர் முதல் 100 பேர் வரை சிகிச்சைக்கு வருகின்றனர்.
தொடர்ச்சியான ஆலோசனை, சிகிச்சை அளித்தால் மட்டுமே மனநலம் பாதித்தோரை இயல்பு நிலைக்கு கொண்டு வர முடியும். ஆனால் தொடர்ச்சியாக மருந்துகளை உட் கொள்ளா விட்டால். அவர்கள் இயல்புநிலைக்கு திரும்ப முடியாமல் பராமரிப்பதும் சிரமமாகி உறவினர்களே கைவிடலாம்.
இந்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் ஒரு ஆண்டாகவே மனநல சிகிச்சைக்கான மருந்து, மாத் திரைகளுக்கு பற்றாக்குறை ஏற் பட்டுள்ளது. குறிப்பாக மதுரை, கன்னியாகுமரி, தூத்துக்குடி,திருநெல்வேலி மருத்துவக் கல்லூரிமருத்துவமனைகளில் அதீத பாதிப்புள்ள மனநோயாளிகளை கட்டுப்படுத்தும் அத்தியாவசிய மருந்து, மாத்திரைகளுக்கு பற்றாக் குறை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து மனநலத்துறை மருத்துவர்கள் கூறியதாவது: கடந்த ஒன்றரை ஆண்டாக கரோனாவுக்கு முக்கியத்துவம் அளித்து பெரும்பாலான நிதி அதற்கான சிகிச்சைக்கும், மருந்து கொள்முதலுக்கு திருப்பி விடப்பட்டது. ஏற்கெனவே மனநலத் துறை புறக்கணிப்பட்ட துறையாக உள்ளது.
தற்போது நிதியும் சரிவர ஒதுக்காமல் மனநல சிகிச்சைக்கான மருந்து,மாத்திரைகளை 6 மாதமாக தமிழ்நாடுமருத்துவக் கழகம் முறையாக விநியோகம் செய்யவில்லை. சில மாதமாகஇருப்பில் உள்ள மருந்து, மாத்திரைகள்மற்றும் மாற்று மாத்திரைகளை வைத்தும் சிகிச்சை அளித்தோம். சாதாரணபதற்றம், தூக்கமின்மை, மன அழுத்தத்துக்கு மருந்து, மாத்திரைகள் மட்டுமே உள்ளன. வலிப்பு நோய்க்கு மருந்து, மாத்திரை இல்லை.
தீவிரமான மனநோய்க்கு அளிக்கப்படும் ரிஸ்பெரிடோன், ஒலான்சிபைன், ஹாலோ பெரிடால், சோடியம்வால்புரோயேட், கார்பமசிபைன் உள்ளிட்ட மருந்துகளுக்கு மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி மருத்துவமனைகளில் பற்றாக்குறை உள்ளது. இதற்கான மாற்று மருந்துகளும்இல்லை. பொதுவாகவே மனநலம் பாதிப் புக்கான மருந்துகள் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகாமருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் கிடைப்பது இல்லை. அதனால், நோயாளிகளுடன் உறவினர்கள் பல கி.மீ. அலைக்கழிக்கப்படுகின்றனர். நீரிழிவு, ரத்த அழுத்தத்துக்குமருத்துவர்கள் துண்டுச் சீட்டில்எழுதி வெளியே மாத்திரைகளை வாங்கிக் கொள்ளச் சொல்லலாம்.
ஆனால், மனநல பாதிப்புக்கான மருந்துகளை மருத்துவர் பரிந்துரை இன்றி மருந்தகங்களில் வழங்கமாட்டார்கள். இதுவே மற்ற நோய்களுக்கு மருந்து, மாத்திரை பற்றாக்குறை என்றால் அத்தகவல் உடனே வெளிச்சத்துக்கு வந்திருக்கும். ஆனால், மன நோயாளிகள் என்பதால் இந்த பிரச்சினை வெளியே வருவதில்லை. மனநல மருத்துவர்கள் 5 வகை மருந்து, மாத்திரைகளை எழுதிக் கொடுத்தால், அதிகபட்சம் 2 அல்லது 3 வகை மாத்திரைகள்மட்டுமே மாவட்ட அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கிடைக்கிறது.
மாவட்ட மனநலத் திட்டத்தில் மருந்து,மாத்திரைகள் மட்டுமாவது அனைத்து அரசு மருத்துவமனைகள், சுகாதாரநிலையங்களில் கிடைக்கும்படி செய்ய வேண்டும் என்றனர்.
இதுகுறித்து டீன் ரத்தின வேலுவிடம் கேட்டபோது, மருந்து, மாத்திரைகள் பற்றாக்குறை ஏற்பட்டால் நாங்களே கொள்முதல் செய்வதற்கு அதிகாரம் உள்ளது. அதனால், மனநல சிகிச்சையில் பாதிப்பு இல்லை என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago