திருப்பூர் சகோதரிகளுக்கு மிரட்டல் விடுத்த சென்னை நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
திருப்பூரை சேர்ந்தவர்கள் 19 மற்றும் 22 வயது இளம்பெண்கள். சகோதரிகள். கடந்த, 2014-ம் ஆண்டு இருவருக்கும், சென்னையில் அலைபேசி பழுது நீக்கும் தொழில் புரிந்த செந்தில்குமார் (42) என்பவரிடம், இணையம் மூலம், பழக்கம் ஏற்பட்டது. இருவரிடமும் ஆசை வார்த்தை கூறி பழகி வந்த செந்தில்குமார், கடந்த 2019-ம் ஆண்டு, இருவரின் அந்தரங்க புகைப்படங்களையும் பெற்றுள்ளார். அதை சமூக வலைதளத்தில் வெளியிடாமல் இருக்க பணம், நகை தேவை என்று மிரட்டியுள்ளார். மேலும் திருப்பூர் வந்த செந்தில்குமார், சகோதரிகள் இருவரிடமும் அத்துமீறியுள்ளார்.
தொடர்ந்து மிரட்டல் விடுத்து, பல்வேறு கட்டங்களாக 40 பவுன் நகை, ரூ. 30 ஆயிரம் பணத்தை செந்தில் பெற்றதாக கூறப்படுகிறது. அதற்கு பின்னும், இருவரிடமும் பணம்கேட்டு செந்தில்குமார் மிரட்டி வந்துள்ளார். இதுகுறித்து திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் அலுவலகத்தில் சகோதரிகள் புகார் அளித்தனர். மாநகர சைபர் கிரைம் போலீஸார் விசாரித்தனர்.
மிரட்டல் விடுத்து வந்த செந்தில்குமாரை கைது செய்த போலீஸார், அவரை திருப்பூருக்கு அழைத்து வந்தனர். இந்த வழக்கு திருப்பூர் வடக்கு மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்ட நிலையில், போக்ஸோ சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, செந்தில்குமாரை மகளிர் போலீஸார் கைது செய்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago